மயிலாடுதுறை அருகே ஓஎன்ஜிசி தளவாட பொருட்களை ஏற்றி வந்த லாரி சிறை பிடிப்பு
மயிலாடுதுறை அருகே ஓஎன்ஜிசி தளவாட பொருட்களை ஏற்றிவந்த லாரியை சிறைப் பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
மயிலாடுதுறை அருகே ஓஎன்ஜிசி தளவாட பொருட்களை ஏற்றிவந்த ராட்சச லாரியை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிதாக எண்ணெய் கிணறு அமைக்க முயற்சி செய்வதாக குற்றச்சாட்டினர்.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா, திருவேள்விக்குடி கிராமத்தில் 22 எண் கொண்ட பழைய எண்ணெய்க் கிணறு உள்ளது. இந்த எண்ணெய் கிணறு 25 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் அமைக்கப்பட்டது. இங்கு குத்தாலம் எரிவாயு சேமிப்பு மையத்திலிருந்து கடந்த 10 நாட்களாக தளவாட பொருட்களை லாரிகளில் ஏற்றி வந்து 15க்கும் மேற்பட்ட ஊழியர்கள் துளை போடும் ரீக் மூலம் வேலைகள் நடைபெற்று வருவதாகவும். இந்த வேலையால் இரவில் அதிக அளவில் சப்தம் ஏற்படுவதாகவும், இப்பகுதியில் புதிதாக ஒரு எண்ணெய்க் கிணறு அமைக்க ஓஎன்ஜிசி நிறுவனம் முயற்சிப்பதாக புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து இப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு, மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன் தலைமையில் குத்தாலம் எரிவாயு சேமிப்பு மையத்திலிருந்து தளவாட பொருட்களை ஏற்றிவந்த ராட்சச லாரியை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துள்ள நிலையில், எண்ணெய் கிணறுகளில் பராமரிப்பு பணி என்ற பெயரில் புதிய எண்ணெய்க் கிணறு அமைக்க முயற்சிப்பதாக கூறி ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு எதிராக முழக்கமிட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டு மணி நேரம் போராட்டம் நீடித்தது. குத்தாலம் வட்டாட்சியர் பிரான்ஸ்வா, குத்தாலம் போலீசார் ஓஎன்ஜிசி பாதுகாப்பு ஆய்வாளர் பத்மநாதன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். தளவாட பொருட்களை ஏற்றிவந்த லாரி திருப்பி அனுப்பி பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu