மயிலாடுதுறையில் கெட்டுப்போன ஆட்டிறைச்சியை விற்பனை செய்த கடைக்கு சீல்
மயிலாடுதுறையில் கெட்டுப்போன இறைச்சியை விற்பனை செய்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
தமிழகத்தில் தினசரி அதிகரித்துவரும் கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழக அரசு ஞாயிறு முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. அவ்வகையில், 3-ஆம் வார ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கை முன்னிட்டு, மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நகராட்சி அலுவலர்கள் காலைமுதல் நகரின் அனைத்துப் பகுதிகளிலும் சோதனை மேற்கொண்டனர். இச்சோதனையில், மயிலாடுதுறை புனுகீஸ்வரர் கீழவீதியில் உள்ள இறைச்சிக்கடை ஒன்றில் நாள்பட்ட ஆட்டு இறைச்சி விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.
இதையடுத்து, அங்கு சென்ற நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் ராமையன், பிச்சைமுத்து, டேவிட் பாஸ்கர்ராஜ் ஆகியோர் தலைமையில் தூய்மை இந்தியா திட்ட அலுவலர்கள், அக்கடையில் 4 நாட்களான ஆட்டு இறைச்சி விற்பனை செய்வதைக் கண்டறிந்தனர். இதையடுத்து, ஆட்டு இறைச்சி மற்றும் குளிர்பதனப் பெட்டி ஆகியவற்றை பறிமுதல் செய்த நகராட்சி அலுவலர்கள் அக்கடைக்கு சீல் வைத்ததுடன், ரூ.5000 அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும், ஊரடங்கு நாளில் இயங்கிய டீக்கடையில் கேஸ் சிலிண்டரை பறிமுதல் செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu