மயிலாடுதுறையில் அனுமதி இன்றி இயங்கிய மதுபான பார்களுக்கு சீல் வைப்பு

மயிலாடுதுறையில் அனுமதி இன்றி இயங்கிய மதுபான பார்களுக்கு சீல் வைப்பு
X

அனுமதி இன்றி செயல்பட்ட ஒரு பாருக்கு சீல் வைக்கப்பட்டது.

மயிலாடுதுறையில் அனுமதி இன்றி இயங்கிய மதுபான பார்களுக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

மயிலாடுதுறை நகரில் 5 டாஸ்மாக் மதுபானக்கடைகளில் அரசு அனுமதி இன்றி பார் இயங்கி வருகிறது. அதிகாரிகள் பலமுறை எச்சரித்தும் உரிமம் வாங்காமல் பார் நடத்தப்பட்டு வந்தது. இதனால் தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் டாஸ்மாக் நிறுவன மாவட்ட மேலாளர் வாசுதேவன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் போலீசார் அந்த பார்களுக்கு சென்று சோதனையிட்டனர். இதில் அனுமதி பெற்ற பாரை போலவே 3 டாஸ்மாக் கடைகளில் பார்கள் திருட்டுத்jனமாக செயல்பட்டு வந்தது.

அதிகாரிகள் சோதனைக்கு வரும் தகவலை அறிந்த பார் நடத்தியவர்கள் தப்பி ஓடிவிட்டனர். நூற்றுக்கணக்கான மதுபாட்டில்களுடன் பார் நடைபெற்று வந்தது. உடனடியாக அங்கு குடித்துக்கொண்டிருந்த குடிமகன்களை அதிகாரிகள் அப்புறப்படுத்திவிட்டு கடையை இழுததுப் பூட்டி சீல் வைத்தனர்.

மயிலாடுதுபேருந்து நிலையம், மயிலாடுதுறை மகாதானத்தெரு மற்றும் மயிலாடுதுறை கூறைநாடு டாஸ்மாக் கடைகளில் நடைபெற்ற சோதனையில் அனுமதியில்லாமல் பார் நடத்திவந்ததும், ஏற்கனவே பாரை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்ததும், வழியை வேறுபக்கம் மாற்றி பாரை வழக்கம்போல் நடத்தியது தெரியவந்தது. உடனடியாக பாரை மூடசொல்லப்பட்டது, அரசிடம் அனுமதிபெற்ற பிறகு பாரை நடத்திகொள்ள வேண்டும என்றும் அதுவரை அங்கே பார் நடத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது என்றும் அதையும் மீறி நடந்தால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் எச்சரித்துச் சென்றனர்.

Tags

Next Story