திருமுல்லைவாசலில் கடல் அரிப்பை தடுக்க தடுப்பு சுவர் அமைக்க கோரிக்கை

திருமுல்லைவாசலில் கடல் அரிப்பை தடுக்க தடுப்பு சுவர் அமைக்க கோரிக்கை
X

திருமுல்லை வாசலில் கடல் அரிப்பினால் இடிந்து விழுந்த வீடு.

சீர்காழி அருகே திருமுல்லைவாசலில் கடல் அரிப்பை தடுக்க நிரந்தர தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தில் உள்ள மேட்டுதெருவில் 150 க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் வசித்து வந்தனர்.சுனாமிக்கு பின்னர் இவர்களில் சிலருக்கு மாற்று இடம் வழங்கப்பட்ட நிலையில் அனைவரும் மீன்பிடி தொழில் செய்வதற்காக மேட்டு தெருவில் இருந்தே வழக்கம் போல் மீன்பிடிக்க செல்வதும் பின்னர் பிடித்துவரும் மீன்களை அப்பகுதியிலேயே ஏலம் விட்டு விற்பனையும் செய்தும் வந்தனர்.

இந்நிலையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் திருமுல்லைவாசாலில் புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்கப்பட்டது. இதற்கான முகத்துவாரம் தூண்டில் வளைவு இல்லாமல் கூடுதல் அகலத்தில் 275 மீட்டர் அளவுக்கு அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதனால் கடல் அலையின் சீற்றம் முழுவதும் மேட்டுதெருவை நோக்கியே வந்துள்ளது.இதன் காரணமாக தற்போது சுமார் 100 மீட்டர் வரை கடல்நீர் உட்புகுந்துள்ளது.

இதனால் திருமுல்லைவாசல் துறைமுகம் முதல் மேட்டுத்தெரு வரையிலான காங்கிரிட் சாலை முழுவதுமாக கடலில் வீழ்ந்து மூழ்கியது.இருந்த வழியும் துண்டிக்கபட்டதால் இப்பகுதியில் படகையும் நிறுத்த முடியாமல், மீன்களை ஏலம்விட்டு விறபனை செய்ய இடமும் இல்லாமல் மீனவர்கள் தவித்து வருகின்றனர்.150 குடும்பங்கள் வசித்த மேட்டுதெருவில் தற்போது இரண்டு குடும்பத்தினர் மட்டுமே வசிக்கின்றனர்.சாலை துண்டிக்கப்பட்டதால் கூரை வீடு முதல் மாடி வீடுகள் வரை அப்படியே விட்டு சென்றுள்ளனர்.சாலை கடலில் மூழ்கியதால் இங்கு அமைந்துள்ள ஆகாய காளியம்மன் கோவில் திருவிழாவும் சில ஆண்டுகளாக தடைபட்டுள்ளது எனவும் கவலை தெரிவித்தனர்.

எனவே மேட்டுதெரு மீனவர்களின் நலன் கருதி கடல் அரிப்பை தடுக்கதுறைமுகத்தில் தூண்டில் வளைவு அமைக்கவும் நிரந்த அலை தடுப்புச்சுவர் அமைக்கவும் மேட்டுதெரு மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ai in future agriculture