மாணவர்கள் மன ரீதியாக பாதிக்கக்கூடாது என்பதற்காக பள்ளிகள் திறக்கப்படுகின்றன
மயிலாடுதுறை அருகே நூலகக்கட்டிடத்தை திறந்து லைத்தா பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
மாணவர்கள் மன ரீதியாக பாதிக்கக்கூடாது என்பதற்காக பள்ளிகள் திறக்கப் படுகின்றன. இந்த ஆண்டு பொதுத்தேர்வு முறையில் மாற்றம் இல்லை. டிசம்பர் மாதத்திலிருந்து மாதம்தோறும் மாதிரித் தேர்வு நடத்தப்படும் என்றார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் கோமல் ஊராட்சியில் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் 16லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கிளை நூலகக் கட்டிடம் திறப்பு விழா இன்று மாவட்ட ஆட்சியர் லலிதா தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம். சட்டமன்ற கொறடா கோவி.செழியன், அமைச்சர்கள் சிவ.வீ. மெய்யநாதன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பங்கேற்றனர்.
நூலகக் கட்டிடத்தை திறந்து வைத்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசியதாவது: கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால் பள்ளி செல்லும் குழந்தைகள் மனதளவில் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அவர்கள் மனரீதியாக மீண்டும் நடைமுறை வாழ்க்கைக்கு வரவேண்டும் என்பதற்காக நவம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. பெற்றோர்களின் அச்சத்தை போக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பள்ளிக்கு வருவதும் வராததும் மாணவ மாணவிகள் விருப்பம் என்று கூறியுள்ளோம். இருந்த போதிலும், பள்ளிக்கு வராத மாணவர்கள் கல்வி கற்பதற்காக ஆன்லைன் வகுப்புகள் கல்வி தொலைக்காட்சி உள்ளிட்டவை தொடர்ந்து நடைபெறும். இருப்பினும் பெருமளவு அதாவது 55 சதவிகிதம் அளவு வழக்கமான பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளது. காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் நடத்த முடியாது என்பதால் டிசம்பர் மாதத்தில் இருந்து மாதிரி தேர்வுகள் நடைபெறும். தேர்வு முறையில் மாற்றம் இன்றி மார்ச் ஏப்ரல் மாதங்களில் வழக்கமான தேர்வுகள் நடைபெறும் என்று தெரிவித்தார்.
ஊர்புற நூலகர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பாக முதலமைச்சர்தான் முடிவெடுப்பார். சிஏ தணிக்கையாளர்கள் அலுவலகத்தில் அலுவலக மொழியாக ஹிந்தியில் நடைமுறைப்படுத்த அறிவிக்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு சிபிஎஸ்இ பாடப் பிரிவில் உள்ள மேஜர் லாங்குவேஜ் மைனர் லாங்குவேஜ் என்பது தவறானது. நமது தாய்மொழியான தமிழ் மைனர் லாங்குவேஜ் ஆக இருக்கிறது. தேவையில்லாத முடிவுகளை மத்திய அரசு எடுக்கிறது என்றார்.
பேட்டி :-
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu