மயிலாடுதுறை அருகே சேண்டிருப்பு முத்துமாரியம்மன் கோயில் பால்குட திருவிழா

மயிலாடுதுறை அருகே சேண்டிருப்பு முத்துமாரியம்மன் கோயில்  பால்குட திருவிழா
X

மயிலாடுதுறை அருகே கோவில் விழாவில் பெண்கள் பால்குடம் எடுத்து வந்தனர்.

மயிலாடுதுறை அருகே சேண்டிருப்பு முத்துமாரியம்மன் கோயில் பால்குட திருவிழா விமரிசையாக நடந்தது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே சேண்டிருப்பில் புகழ்பெற்ற முத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பால்குட சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தினந்தோறும் அம்பாள் வீதியுலா நடைபெற்றது.

முக்கிய விழாவான இன்று குத்தாலம் காவிரி தீர்த்த படித்துறையில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடிகள் எடுத்து வீதியுலாவாக நடந்து கோயிலை வந்தடைந்தனர். அங்கு முத்து மாரியம்மனுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு புஷ்ப அலங்காரம் மற்றும் சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா