வடிகால் தூர்வாராததால் நீரில் மூழ்கிய பல ஆயிரம் ஏக்கர் சம்பா நாற்று

வடிகால் தூர்வாராததால் நீரில் மூழ்கிய பல ஆயிரம் ஏக்கர் சம்பா நாற்று
X

மழை நீர் வடிய வழியின்றி வயலில் தேங்கி இருப்பதால், சம்பா நாற்று அழுகும் நிலையில் உள்ளது. 

மயிலாடுதுறையில், வடிகால் தூர்வாராததால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில், சம்பா நாற்றுகள் நீரில் மூழ்கியுள்ளன.

மயிலாடுதுறை மாவட்டத்தில், 10 நாட்களுக்கும் மேலாக மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும், சுமார் 30 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா, தாளடி பயிர்கள், நீரால் சூழ்ந்து உள்ளன. இதில் 25 சதவீதத்திற்கும் அதிகமான பயிர்கள், அழுகிய நிலையில் உள்ளதாக, விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். நேற்று மாலை முதல், மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில், மழை இல்லாததால் விவசாயிகள் சற்று ஆறுதல் அடைந்து உள்ளனர். இதனால், விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் உள்ள மழைநீரை வடியவைக்கும் பணியில், தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

மயிலாடுதுறை அருகே அருவாப்பாடி, கீழமருதாநல்லூர், பொன்வாசநல்லூர், ராதாநல்லூர், வில்லியநல்லூர், உச்சிதமங்கலம், தாழஞ்சேரி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில், அப்பகுதி வடிகால் வாய்க்கால்கள் முறையாக தூர்வாரப்படாத காரணத்தால் தண்ணீர் வடிய வழியின்றி தேங்கி நிற்கிறது. ஏற்கனவே பல நாட்களாக மழை நீரில் மூழ்கியுள்ள நிலையில், நீர் வடியாததால் பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில், வாய்க்கால்களில் மழைநீர் வடிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி