மயிலாடுதுறையில் சேந்தங்குடி படைவெட்டி மாரியம்மன் கோயில் திருவிழா: பக்தர்கள் வழிபாடு

மயிலாடுதுறையில் சேந்தங்குடி படைவெட்டி மாரியம்மன் கோயில் திருவிழா: பக்தர்கள் வழிபாடு
X

சேந்தங்குடி படைவெட்டி மாரியம்மன் 

பக்தர்கள் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் இருந்து பால்குடம் எடுத்து வீதியுலா சென்று கோயிலைச் சென்றடைந்தனர்

மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற சேந்தங்குடி படைவெட்டி மாரியம்மனுக்கு 22-ஆம் ஆண்டு பால்குடத் திருவிழா:- 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடங்களை சுமந்துவந்து பால் அபிஷேகம் செய்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி செல்லும் சாலையில் பிரசித்திபெற்ற சேந்தங்குடி ஸ்ரீபடைவெட்டி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் 22-ஆம் ஆண்டு பால்குடத் திருவிழா இன்று நடைபெற்றது.



இதையொட்டி, விரதமிருந்த 300க்கும் மேற்பட்ட பக்தர்கள், பிரசித்திபெற்ற மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் இருந்து பால்குடம் எடுத்து வீதியுலாவாக கோயிலைச் சென்றடைந்தனர்.

வழியெங்கும் பக்தர்கள் தீபாராதனை எடுத்து வழிபாடு நடத்தினர். கோயிலை அடைந்த பக்தர்கள் அளித்த பாலினைக் கொண்டு அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!