மயிலாடுதுறையில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
X
மயிலாடுதுறையில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தினர் 15 அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
By - M.Vinoth,Reporter |22 Dec 2021 1:10 PM IST
15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறையில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஊராட்சி செயலர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்கவேண்டும்,அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அனைத்து உரிமைகளையும் வழங்க வேண்டும், காலியாக உள்ள பணி மேற்பார்வையாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 9அம்ச கோரிக்கைக்களை வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாவட்ட தலைவர் நல்லமுத்து தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பொருளாளர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu