சீர்காழி அருகே தொகுப்பு வீட்டின் கூரை பெயர்ந்து விழுந்து ஒருவர் காயம்
சீர்காழி அருகே தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே 42.ராதாநல்லூர் கிராமத்தில் 20 க்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகள் உள்ளன. கடந்த 1991 ஆம் ஆண்டு கட்டப்பட இந்த வீடுகள் தற்போது வரை 30 வருடங்களாக எந்தவித பராமரிப்பும் இன்றி சிதிலமடைந்து உள்ளது. இந்நிலையில் இக்கிராமத்தில் கூலி விவசாயி அறிவழகன் மனைவி யசோதாவுடன் வசித்து வருகிறார்.
நேற்று இரவு வழக்கம் போல வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது தொகுப்பு வீட்டின் மேற்கூரையில் உள்ள சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்தது. இதனால் காயம் அடைந்த அறிவழகன் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்துள்ளார். அடுத்தடுத்து பெயர்ந்து விழுந்த காரையால் வீட்டில் இருந்த டி.வி உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் சேதமடைந்தன.
மேலும் இங்குள்ளதொகுப்பு வீடுகள் முழுவதும் சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளன. சமீபத்தில் தூங்கிக்கொண்டு இருக்கும்போது மின்விசிறி பெயர்ந்து விழுந்து பெண் ஒருவர் தலையில் அடிபட்டு காயமான சம்பவமும் இந்த கிராமத்தில் நடைபெற்று உள்ளது.
இதில் வாழும் ஏழை மக்கள் உயிர் பயத்துடன் அருகில் குடிசை அமைத்தும்,வீட்டின் மீது தார்பாய்கள் கட்டியும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். எப்பொழுது வேண்டுமானாலும் தொகுப்பு வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன.எனவே தொகுப்பு வீடுகளை மறுசீரமைப்பு செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu