திருக்கடையூரில் சாலை விரிவாக்க பணியை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு

திருக்கடையூரில் சாலை விரிவாக்க பணியை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
X

திருக்கடையூரில் சாலை விரிவாக்கப்பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருக்கடையூரில் சாலை விரிவாக்க பணியை கம்யூனிஸ்ட் மற்றும் பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கொள்ளிடம் முதல் பொறையார் வரை என்.எச் 45ஏ நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக கொள்ளிடத்திலிருந்து பொறையார் வரை உள்ள நிலம், வீடு, கையகப்படுத்தும் பணி நடைப்பெற்று வருகிறது.

இந்த நிலையில் நிலம் கையகப்படுத்தப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்காமலும், மேல் முறையீட்டிற்கான விசாரணை நடத்தாமலும், குடியிருப்புகளை இடித்து சாலை பணிகளை செய்து வரும் நெடுஞ்சாலை துறையினர் நேற்று முன் அறிவிப்பின்றி திருக்கடையூர் ஊராட்சிக்குட்பட்ட அம்புக்குறி போடப்பட்ட சாலையிலுள்ள மரம், வீடு மற்றும் நிலங்களை ஜே.சி.பி எந்திரம் மூலம் அப்புறப்படுத்த வந்தபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்.

இதுகுறித்து தகவலறிந்த தரங்கம்பாடி தாசில்தார் ஹரிதரன், பொறையார் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு, தேசிய நெடுஞ்சாலை துறை உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். 100 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்ட்டது.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!