மயிலாடுதுறை அருகே சாலை வசதி கோரி பெண்கள் பாடை கட்டி போராட்டம்

மயிலாடுதுறை அருகே சாலை வசதி கோரி பெண்கள் பாடை கட்டி போராட்டம்
X
மயிலாடுதுறையில் சாலை வசதி கோரி பெண்கள் பாடை கட்டி நூதன போராட்டம் நடத்தினர்.
மயிலாடுதுறை அருகே சாலை வசதி கோரி பெண்கள் பாடை கட்டி நூதன போராட்டம் நடத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ஒன்றியம் சோழம்பேட்டை ஊராட்சி கோழிகுத்தி திட்டம் தெருவிலிருந்து மாதா கோயில் மெயின் ரோடு வரை உள்ள சாலை, தோப்புத் தெரு சாலை, திட்டக்குளத்தெருசுடுகாட்டு சாலை, கோழிகுத்தி பெரிய தெருவில் இருந்து எம்.ஜி.ஆர். நகர் மெயின் ரோடு வரை உள்ள சாலைகள் பல ஆண்டுகளாக மக்கள் நடமாட முடியாத மிகவும் மோசமான நிலையில் உள்ளதை செப்பனிட கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாடைகட்டி நூதன போராட்டம் நடைபெற்றது.

கிளை செயலாளர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்ற போராட்டத்தில் ஏராளமான பெண்கள் மற்றும் கிராம மக்கள் கலந்துகொண்டு ஊராட்சி மன்ற அலுவலகத்திலிருந்து மாதா கோயில் மெயின் ரோடு வரை சுமார் 2 கிலோமீட்டர் தூரம் பாடையை தூக்கி ஊர்வலமாக சென்று சாலையில் வைத்து ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் குத்தாலம் போலீசார் பேச்சுவார்த்தை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags

Next Story
சிறுநீரகத்துல நச்சுக்கள் இருக்கா ?..உடனே வெளியேற்ற இந்த சில பழங்கள சாப்டுங்க..!| Best fruits for kidney cleansing naturally in tamil