மயிலாடுதுறை கோவில் அருகே டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்

மயிலாடுதுறை கோவில்  அருகே டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்
X

மயிலாடுதறை மயூரநாதர் கோவில் தேரோடும் வீதியில் புதிய டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து  சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

பள்ளி, கல்லூரி மற்றும் குடியிருப்புகள் அருகாமையில் இருப்பதால் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்தனர்

மயிலாடுதறை மயூரநாதர் கோவில் தேரோடும் வீதியில் புதிய டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மயூரநாதர் கோவில் தேரோடும் வீதியான வடக்கு வீதி மயிலாடுதுறை - தரங்கம்பாடி செல்லும் பிரதான சாலையில் இன்று புதிய டாஸ்மாக் கடை ரகசியமாக திறக்கப்பட்டது. டாஸ்மாக் கடைக்கு லாரி மூலம் மதுபானங்கள் வந்து இறங்கியது. இதனை கண்ட வடக்கு வீதி அருகே உள்ள இந்திரா காலணி மக்கள் புதிய டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

1000ஆண்டுகள் பழமை வாய்ந்த மயூரநாதர் கோவில் தேரோடும் வீதியில் டாஸ்மாக் மதுபானக்கடை அமைத்தால் ஐப்பசி மாதம் தினந்தோறும் நடைபெறும் சாமி வீதி உலாவிற்கு இடையூறு ஏற்படும் என்றும் மேலும், பள்ளி, கல்லூரி மற்றும் குடியிருப்புகள் அருகாமையில் இருப்பதால் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த மயிலாடுதுறை காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக மதுபான கடை மூடப்படும் என்ற வாக்குறுதியை அடுத்து பொது மக்கள் கலைந்து சென்றனர். தமிழக அரசு பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் மதுபானக் கடையை திறக்க அனுமதித்த நிலையில் பிரதான சாலையில் மதுபானக் கடை திறக்கப்பட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!