/* */

மயிலாடுதுறை அருகே அடிப்படை வசதி கோரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டம்

மயிலாடுதுறை அருகே அடிப்படை வசதி கோரி அரசு கல்லூரி மாணவர்கள் சாலைமறியல் போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

மயிலாடுதுறை அருகே அடிப்படை வசதி கோரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டம்
X

மயிலாடுதுறை அடிப்படை வசதிகள் கோரி அரசு கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா திருவாலங்காடு ஊராட்சியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அரசின் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டது. இந்த கல்லூரிக்கு என தனியாக இடம் ஒதுக்கப்பட நிலையில் மாதிரிமங்கலம் கிராம சேவை மைய கட்டிடத்தில் கல்லூரி தொடங்கப்பட்டது. இதில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு கல்வி பயின்று வருகின்றனர். கல்லூரி இயங்கும் கட்டிடத்தில் மாணவர்கள் அமர்ந்து பயில்வதற்கு வகுப்பறைகள் இல்லாததால் மாணவர்கள் இட நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனர்.மேலும் அடிப்படை தேவையான கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததால் மாணவர்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், உயர்கல்வி துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நிரந்தர வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் சரிவர செய்து தர எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் இன்று காலை கல்லூரி வகுப்புகளை புறக்கணித்து இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் தலைமையில் மயிலாடுதுறை- கும்பகோணம் சாலையில் திருவாலங்காடு மெயின் ரோட்டில் திரண்டு சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்த குத்தாலம் தாசில்தார் பிரான்ஸ்வா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

Updated On: 16 March 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    ஸ்ரீ மாரியம்மன் பூப்பல்லாக்கு திருவிழா..!
  2. வீடியோ
    தேர்தலில் VK Pandian நிற்கட்டும் நாங்கள் தடுக்கவில்லை Annamalai...
  3. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோவிலில் 1008 கலசபிஷேகம்..!
  4. ஈரோடு
    வணிகர் சங்க பேரமைப்பு: சத்தியில் துவக்க விழா ஆலோசனைக் கூட்டம்
  5. இந்தியா
    மிசோரம் கல்குவாரியில் பாறை சரிந்து 14 பேர் பலி
  6. ஆன்மீகம்
    வெந்நீர் அபிஷேகம் நடக்கும் அதிசய சிவன் கோவில்!
  7. லைஃப்ஸ்டைல்
    கடனாகக் கொடுக்கக் கூடாத பொருட்கள் எவை தெரியுமா?
  8. சோழவந்தான்
    வாடிப்பட்டி அருகே ,கத்தியை காட்டி மிரட்டி வியாபாரிடம் வழிப்பறி; மூன்று...
  9. சோழவந்தான்
    வாடிப்பட்டி அருகே மூதாட்டி கொலை; பேரனை தேடும் போலீசார்
  10. கல்வி
    கல்விக் கடன் பெறத் திட்டமிடும் மாணவர்களுக்கு முக்கியம்