மயிலாடுதுறை அருகே நடந்த சாலை விபத்தில் ஆசிரியர் உள்பட இருவர் பலி

மயிலாடுதுறை அருகே  நடந்த சாலை விபத்தில் ஆசிரியர் உள்பட இருவர் பலி
X

மயிலாடுதுறை அருகே நடந்த சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

மயிலாடுதுறை அருகே நடந்த சாலை விபத்தில் ஆசிரியர் உள்பட இருவர் பலியானார்கள்.

மயிலாடுதுறை நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது45)இவர் மயிலாடுதுறை மாவட்டம் எரவாஞ்சேரி கிராமத்தில் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் பள்ளி பணியை முடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். இதேபோல் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் நல்லம்பல் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் 26 என்பவர் அதே கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ் (10) ,மகேஷ் (12) ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் கஞ்சா நகரத்தில் உள்ள தனது சகோதரியின் வீட்டிற்குச் சென்று கோவில் பிரசாதம் கொடுத்துவிட்டு வீடு திரும்பியுள்ளார்.

திருவிளையாட்டம் அருகே குமாரமங்கலம் மெயின் ரோட்டில் ஆசிரியர் செந்தில்குமார் மற்றும் தமிழ்ச்செல்வன் ஆகியோர் ஓட்டிவந்த இரண்டு இரு சக்கர வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் தமிழ்ச்செல்வன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து விபத்தில் காயமடைந்த ஆசிரியர் செந்தில்குமார் ஆகாஷ், மகேஷ் ஆகிய மூவரையும் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே ஆசிரியர் செந்தில்குமார் உயிரிழந்தார்.

மற்ற இருவரும் எலும்பு முறிவுடன் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் இச்சம்பவம் குறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!