மயிலாடுதுறையில் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில்  புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
X

புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியினர் மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா பயிர்கள் அறுவடை நேரத்தில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட நெற் பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்,சேதம் அடைந்த வீடுகள் இறந்த கால்நடைகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், குத்தாலம் வட்டத்தில் கிராம உதவியாளர் நியமனத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதால் முறைகேடான நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட செயலாளர் நாராயணன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!