கிணற்றில் விழுந்த காளையை மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு பாராட்டு

கிணற்றில் விழுந்த காளையை மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு பாராட்டு
X

மீட்கப்பட்ட காளை.

சித்தர்காடு அருகே, கிணற்றில் விழுந்த காளையை மீட்ட தீயணைப்புத் துறையினரை பொதுமக்கள் பாராட்டினர்.

மயிலாடுதுறை மாவட்டம், மாப்படுகை ராமாபுரம் அக்ரஹாரத்தை சேர்ந்தவர் ராஜரத்தினம். இவர் வளர்த்து வரும் காளை, சித்தர்காடு காவிரி ஆற்றங்கரை அருகேயே உள்ள மயிலாடுதுறை நகராட்சிக்கு சொந்தமான பயன்படாத குடிநீர் பம்பிங் ஹவுஸ் திடலில் மேய்ச்சலுக்கு செல்வது வழக்கம்.

நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு சென்ற கன்று, மீண்டும் வீடு திரும்பவில்லை. சந்தேகம் அடைந்த ராஜரத்தினம் , பயன்படாத குடிநீர் பம்பிங் ஹவுஸ் திடலில் உள்ள தரைமட்ட கிணற்றை பார்த்துள்ளார். அப்போது கன்று கிணற்றில் தவறி விழுந்து இருப்பது தெரியவந்தது.

மயிலாடுதுறை தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, இரண்டு மணி நேரம் போராடி மாட்டை உயிருடன் மீட்டனர். பாழடைந்த கிணற்றில் இறங்கி கன்றை மீட்ட தீயணைப்பு ஆய்வாளர் முத்துக்குமார், சிவக்குமார் மணிகண்டன், ஐயப்பன், வினோத்குமார், ஏழுமலை உள்ளிட்டவர்களை பொதுமக்கள் பாராட்டினர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!