மயிலாடுதுறை குடியரசு தினவிழாவில் வ.உ.சிதம்பரனார் படத்துக்கு மரியாதை

மயிலாடுதுறை குடியரசு தினவிழாவில் வ.உ.சிதம்பரனார் படத்துக்கு மரியாதை
X

மயிலாடுதுறையில் நடந்த குடியரசு தினவிழாவில் வ.உ.சிதம்பரனார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

மயிலாடுதுறையில் நடந்த குடியரசு தினவிழாவில் வ.உ.சிதம்பரனார் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

டெல்லியில் நடைபெற்ற குடியரசு தினவிழா அணிவகுப்பில் தமிழகம் சார்பில் பாரதியார், வேலுநாச்சியார், வ.உ.சிதம்பரனார் ஆகியோரின் உருவம் அடங்கிய அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் இந்த அலங்கார ஊர்தி வலம் வரவுள்ளது. மயிலாடுதுறை கச்சேரி சாலையில் பொதுத் தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் வ.உ.சி. சிதம்பரனார் உருவப்படத்துக்கு சங்கத் தலைவர் ஜெகவீரபாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, நாட்டுப்புறக் கலைஞர்கள் மேளதாள வாத்தியங்கள் முழங்க தேசியக் கொடியை ஏற்றினர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!