மயிலாடுதுறை அருகே பெருமாள் கோவில் விமான பாலாலயம் திருப்பணி தொடக்கம்
பாலாலாய திருப்பணியையொட்டி கடங்கள் புறப்பாடு நடந்தது.
மயிலாடுதுறை மாவட்டம் சோழம்பேட்டை கோழிக்குத்தி கிராமத்தில் வானமுட்டி பெருமாள் என்று அழைக்கப்படும் சீனிவாச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில் பெருமாள் 14 அடி உயரத்தில் ஒரே அத்தி மரத்தில் ஆன திருமேனியை கொண்டு அருள் பாலிக்கிறார். வானமுட்டி பெருமாள் அனைத்து விதமான பிதுர் சாபம், ஹத்தி தோஷம், சரும வியாதி மற்றும் சனி கோளாறு போன்றவைகளை தன்னை சேவிக்க வரும் பக்தர்களுக்கு சேவித்த மாத்திரத்திலேயே போக்கி அருள் பாலிக்கிறார்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவில் மகா சம்ப்ரோக்ஷணம் நடத்துவதற்காக விமான பாலாலயம் மற்றும் திருப்பணி தொடக்க விழா இன்று நடைபெற்றது திருப்பணி தொடக்க விழாவை முன்னிட்டு நேற்று மாலை முதல் சிறப்பு ஹோமங்கள் நடத்தப்பட்டது. இன்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் முடிந்து மஹா பூர்ணாகுதி, தீபாராதனை நடத்தப்பட்டு கடம் புறப்பாடு செய்யப்பட்டது.
தொடர்ந்து கோவிலை வலம் வந்து சுவாமிக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து காலை 9 மணி முதல் பத்து முப்பதுக்கு மேஷ லக்னத்தில் ஸ்ரீ வைகானஸ பகவத் சாஸ்திர முறைப்படி விமான பாலாலயம் மற்றும் திருப்பணி தொடக்க விழா நடைபெற்றது. பூஜைகளை கோவில் அர்ச்சகர் வரதராஜ பட்டாச்சாரியார் தலைமையில் ஸ்தானியம் கோனேரிராஜபுரம் சம்பத் பட்டாச்சாரியார் தலைமையிலான செய்து வைத்தனர்.
தமிழக அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தென்காசி ஜவஹர், தொழிலதிபர் விஜயகுமார், மகாலட்சுமி சுப்பிரமணியன், டெக்கான் மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கலந்து கொண்டு பெருமாளை தரிசித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் நிர்மலா தேவி, தக்கார் பாலு மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu