தருமபுரம் ஆதீனத்தில் அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனத்தில் சமய பயிற்சி
தருமபுரம் ஆதீனத்தில் ஆதீனகுருமுதல்வர் குருபூஜை விழாவையொட்டி தருமபுரம் அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் 10 நாள்கள் சமய பயிற்சி தொடங்கியது
தருமபுரம் ஆதீனத்தில் ஆதீனகுருமுதல்வர் குருபூஜை விழாவையொட்டி தருமபுரம் அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் 10 நாள்கள் சமய பயிற்சி:- 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து 130 பேர் பங்கேற்பு.
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் ஆதீனகுருமுதல்வர் குருஞானசம்பந்தர் குருபூஜையையொட்டி 10 நாள் சமய பயிற்சி வகுப்புகள் நேற்று தொடங்கியது. தருமபுரம் அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் நடத்தப்படும் இந்த பயிற்சி வகுப்பில் அந்நிறுவன இயக்குநர் மு.சிவச்சந்திரன் பங்கேற்று, பயிற்சி அளித்தார். இந்த பயிற்சி வகுப்பு வருகின்ற 21-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
ஆதீனத் திருமடத்தில் உள்ள சிவஞான நிலையத்தில் நடைபெற்ற வகுப்பில் உண்மை விளக்கம், திருவருட்பயன், அகத்தியர் தேவாரத்திரட்டு, சிவபோகசாரம் ஆகிய பாடத்திட்டத்தில் சமயப் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டவர்களுக்கு பயிற்சியின் நிறைவில் தேர்வு நடத்தி தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் சான்றிதழ் வழங்க உள்ளார். இந்த பயிற்சி வகுப்பில் மயிலாடுதுறை மாவட்டம் மட்டுமின்றி தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, கடலூர், புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து 130க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu