/* */

சமய உரிமை -ஆதீனம் பல்லக்கு தூக்குபவர்கள் முதல்வருக்கு கோரிக்கை

பல்லக்கு தூக்குவது எங்களது சமய உரிமை என ஆதீனம் பல்லக்கு தூக்குபவர்கள் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

சமய உரிமை -ஆதீனம்  பல்லக்கு தூக்குபவர்கள் முதல்வருக்கு கோரிக்கை
X

தருமபுரம் ஆதீனம் பல்லக்கு தூக்குபவர்கள் கோரிக்கை மனு அளிக்க வந்தனர்.

தருமபுரம் ஆதீனத்தில் ஆதீனகர்த்தரை சிவிகை பல்லக்கில் அமர்த்தி சுமந்து வீதியுலா செல்வது எங்கள் சமய உரிமை. அதனை யாருக்காகவும் விட்டுத்தர மாட்டோம் என்றும் பல்லக்கை சுமப்பவரின் கருத்துக்களை கேட்காமலேயே பல்லக்கு நிகழ்வுக்கு தடை விதித்துள்ளதாகவும் தருமபுரம் ஆதீனத்தில் பல்லக்கு சுமப்பவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனை வலியுறுத்தி தருமபுரம் ஆதீனத்தல் பல்லக்கு சுமக்கும் 72 பேர் சுயவிருப்பத்தின் பேரிலேயே பல்லக்கு சுமப்பதாக எழுதி கையெழுத்திட்டு மயிலாடுதுறை கோட்டாட்சியரிடம் வழங்கியுள்ளனர்.

தருமபுரம் ஆதீனத் திருமடத்தைச் சுற்றியுள்ள தெருக்களில் வசிக்கும் 72 பேர் பரம்பரை பரம்பரையாக சிவிகை பல்லக்கு தூக்கி வருகின்றனர். இவர்களில் 4 பேர் கோடி நாட்டாமை என அழைக்கப்படுகின்றனர். அவர்களது மேற்பார்வையில் தற்போது பல்லக்கு தூக்கும் இளைஞர்களில் பலர் கல்லூரிகளில் படிப்பவர்களாகவும், பட்டப்படிப்பை முடித்தவர்களாகவும் உள்ளனர்.

தங்களுக்கு கல்வி அறிவு கொடுத்தது தருமபுரம் ஆதீனம்தான் என்றும், தங்களுக்கு வீடு மற்றும் நிலம் ஆகியவற்றை தருமபுரம் ஆதீனம் வழங்கியுள்ளதாகவும், தங்களை யாரும் கட்டாயப்படுத்தி பல்லக்கை சுமக்க சொல்லவில்லை. பல்லக்கு சுமப்பது காலம் காலமாக உள்ள சமய உரிமை. அதனை யாருக்காகவும் விட்டுத்தர மாட்டோம். இவ்விவகாரத்தில் தமிழக முதல்வர் தலையிட்டு, தடை விதிக்கப்பட்ட பல்லக்கு நிகழ்வுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Updated On: 6 May 2022 9:02 AM GMT

Related News

Latest News

  1. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  3. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  5. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  6. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  7. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  8. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  9. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
  10. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!