மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுநர்கள் கோரிக்கை மனு
கோரிக்கை மனு அளிக்க வந்த வாகன ஓட்டுனர்கள்.
மத்திய அரசு 2019-ஆம் ஆண்டு கொண்டுவந்த புதிய மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்தக் கூடாது என வலியுறுத்தி மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மயிலாடுதுறை மாவட்ட உரிமைக்குரல் ஓட்டுநர் தொழிற்சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர்.
இந்த மனுவில், ரூ.35 லட்சம் லஞ்சம் கையூட்டாக பெற்று கையும் களவுமாக பிடிபட்ட போக்குவரத்துத்துறை துணை ஆணையர் நடராஜனை உடனடியாக பணிநீக்கம் செய்து, அவர் மீது நீதி விசாரணை நடத்த வேண்டும், போக்குவரத்து துறையில் லஞ்சம், ஊழல் இல்லா வெளிப்படையான நிர்வாகத்துக்கு முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும், இடைத்தரகர்களை அனுமதிக்கக்கூடாது, 2013-ஆம் ஆண்டு நிர்ணயம் செய்யப்பட்ட ஆட்டோ மீட்டர் கட்டணத்தை இன்றைய விலைவாசிக்கு ஏற்ப தமிழக அரசு மாற்றி அமைக்க வேண்டும், டாக்ஸிகளுக்கு ஆட்டோக்களை போன்று மீட்டர் கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும், சொந்த பயன்பாட்டிற்கு வாங்கிய கார்களை வாடகைக்கு பயன்படுத்தினால் அந்த கார்களின் பதிவு எண்ணை அரசு ரத்து செய்ய வேண்டும், போக்குவரத்துத்துறையில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், வாடகை வாகனங்கள் சவாரி செய்யும்போது விதிமுறைகளை பின்பற்றி வாகனங்களை இயக்கியும் ஆங்காங்கே ஆன்லைன் அபராதம் விதிப்பதை போக்குவரத்து காவல்துறை கைவிடவேண்டும் என்பதுஉள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
கோரிக்கை அடங்கிய மனுவை உரிமைக்குரல் ஓட்டுநர் தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பாலமுருகன், மாவட்ட பொருளாளர் குருநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வழங்கினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu