/* */

மயிலாடுதுறை: மீட்கப்பட்ட செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் காணாமல் போய் மீட்கப்பட்ட செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு செய்யும் நிகழ்ச்சி நடந்தது.

HIGHLIGHTS

மயிலாடுதுறை: மீட்கப்பட்ட செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு
X

மீட்கப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார் மயிலாடுதுறை எஸ்.பி. சுகுணாசிங்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 14 காவல் நிலையங்களில் செல்பொன் தொலைந்துவிட்டதாக கடந்த 3 மாதத்தில் 100க்கும் மேற்பட்ட புகார்கள் வந்தது. இதனை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட எல்லைக்குள் தொலைந்துபோன செல்போன்களை கண்டுபிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் உத்தரவிட்டார்.

மயிலாடுதுறை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தங்கவேல் தலைமையில் சைபர்கிரைம் போலீஸ் தலைமை காவலர் சுதாகர் மற்றும் காவலர்கள் ரவிச்சந்திரன், எழிலன் ஆகியோரின் தீவிர முயற்சியில் ரூ. 15 லட்சம் மதிப்பிலான 110 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டது. கண்டுபிடிக்கப்பட்ட செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

உரிமையாளர்களால் அடையாளம் காண்பிக்கப்பட்ட செல்பொன்களை மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் ஒப்படைத்தார். பின்னர் பொதுமக்களிடம் பேசிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், செல் போன்கள் தொலைந்து போனாலும் திருடப்பட்டால் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் செய்து சி.எஸ்.ஆர். மனு காப்பியை வாங்கிக் கொண்டால், செல்போன்கள் ஒப்படைப்பதற்கு சுலபமாக இருக்கும் என்றும், மயிலாடுதுறை மாவட்டத்தில் மணல் கடத்தல் கஞ்சா குட்கா, கள்ளச்சாராய விற்பனை குறித்து காவல்துறைக்கு தகவல் தர வேண்டும் என்றும், தகவல்தரும் பொதுமக்கள் பற்றிய தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் குற்றமில்லாத மயிலாடுதுறை மாவட்டமாக உருவாக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அப்போது அவர் கேட்டுக்கொண்டார்.

Updated On: 3 Jan 2022 4:40 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?