ரேஷன் அரிசியை சாலையில் கொட்டி ஆர்ப்பாட்டம்

ரேஷன் அரிசியை சாலையில் கொட்டி ஆர்ப்பாட்டம்
X
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே அரசு நியாய விலைக்கடைகளில் தரமான அரிசி வழங்ககோரி, தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் தரமற்ற ரேஷன் அரிசியை சாலையில் கொட்டி கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே அரசு நியாயவிலைக்கடைகளில் தரமான அரிசி வழங்ககோரி தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த சில மாதங்களாகவே அரசு நியாய விலைக்கடைகளில் வழங்கபடும் அரிசி தரமற்று உணவிற்கு பயன்படுத்த முடியாத நிலையில் வழங்கபடுவாதாக கூறினர். மேலும் இரண்டு விதமான அரிசியையும் வாங்க வேண்டும் என ஊழியர்கள் பொதுமக்களை நிர்பந்திக்கின்றனர் என குற்றம்சாற்றினர்.

இதனை கண்டித்தும் தரமான அரிசியை வழங்க வலியுறுத்தியும் தரமற்ற ரேஷன் அரிசியை சாலையில் கொட்டியும் கண்டன கோஷங்களை எழுப்பினர். தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மற்றும் இந்திய மாதர் சங்கத்தினர் இணைந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திரளான விவசாய தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!