தரங்கம்பாடி அருகே ரேஷன் கார்டுகள் குறைதீர்க்கும் நாள் முகாம்

தரங்கம்பாடி அருகே ரேஷன் கார்டுகள் குறைதீர்க்கும் நாள் முகாம்
X

தரங்கம்பாடி அருகே மேலையூரில் ரேஷன்கார்டு குறைதீர்க்கும் நாள் முகாம் நடந்தது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே ரேஷன் கார்டுகள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா தரங்கம்பாடி உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை வட்ட வழங்கல் அலுவலகம் சார்பில் செம்பனார்கோயில் அருகே மேலையூர் கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் ரேஷன் கார்டு தொடர்பான மக்கள் குறைதீர் முகாம் வட்ட வழங்கல் அலுவலர் பாபு தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் நளினி ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

முகாமில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், பெயர் மற்றும் முகவரி திருத்தம், குடும்ப தலைவர் மாற்றம், முகவரி மாற்றம், கைபேசி எண் மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இம்முகாமில் கஞ்சாநகரம், கருவாழக்கரை, மேலையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்கள் குடும்ப அட்டையில் உள்ள குறைபாடுகள் தொடர்பாக மனு செய்து உடனடியாக தீர்வு பெற்றனர். முகாமில் வட்ட வழங்கல் அலுவலக தனி வருவாய் ஆய்வாளர் ஜோசப் ராஜ், கிராம நிர்வாக அலுவலர் கணேஷ் குமார், வட்ட பொறியாளர் ஐயப்பன் மற்றும் ஊராட்சி எழுத்தர் ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி