/* */

மயிலாடுதுறை மாவட்டத்தில் எலி ஒழிப்பு முகாம் நடத்த விவசாயிகள் கோரிக்கை

மயிலாடுதுறை மாவட்டத்தில் எலிகளிடம் இருந்து நெற்பயிரை காக்க எலி ஒழிப்பு முகாம் நடத்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

மயிலாடுதுறை மாவட்டத்தில் எலி ஒழிப்பு முகாம் நடத்த விவசாயிகள் கோரிக்கை
X

மயிலாடுதுறை மாவட்டத்தில் நெற்பயிரை காப்பாற்ற எலி ஒழிப்பு முகாம் நடத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

காவிரி கடைமடை பகுதியான மயிலாடுதுறை மாவட்டத்தில் நெல் சாகுபடி அதிக அளவில் செய்யப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை சுற்றுவட்டார கிராமங்களில் மழையில் தப்பி நன்கு வளர்ந்து தண்டு உருளும் பருவத்தில் உள்ள சம்பா பயிர்களில் எலி தாக்குதல் அதிகரித்திருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் இந்த ஆண்டு சம்பா சாகுபடி செய்த செலவுக்காவது பயிர்கள் விளைந்து கைக்கு கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. நாற்றுவிட்டு நடவுசெய்ய தொடங்கியது முதல் தொடர்ந்து மழைபெய்து வருவதால் பயிர்களை தண்ணீர் சூழ்ந்து பாதிப்படைந்துள்ளது. இந்த ஆண்டு குறுவை சாகுபடியின்போது எலிகள் தாக்குதல் குறைவாக இருந்தது. ஆனால் சம்பா, தாளடியில் மயிலாடுதுறை வட்டார பகுதிகளில் எலிவெட்டு தாக்குதல் அதிகரித்துள்ளது, 40 முதல் 80 நாட்கள் ஆன பயிர்களை எலிகள் கடித்து கொஞ்சம்நஞ்சம் இருந்த பயிர்களையும் அழிப்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகிறோம்.

கிட்டிபோட்டு எலிகளை பிடிக்கும் பணியை பலர் செய்கின்றனர். நூறு கிட்டிகள் போட வேண்டுமென்றால் அதற்கு 500 ரூபாய் சம்பளம் கொடுக்க வேண்டும். பெரும்பாலான இடங்களில் ஒரே நேரத்தில் எலிதாக்குதல் இருப்பதால் கிட்டிகள் போடுவதற்கு ஆட்கள் கிடைப்பதில்லை. இதனால் ஒருசில நாட்களிலேயே எலிகள் பயிர்களை நாசம் செய்துவிட்டு சென்றுவிடுகிறது. கடந்த ஆட்சிகாலத்தில் கோடைகாலத்தில் ஒருங்கிணைந்த எலி ஒழிப்பு முகாம்களை வேளாண்மைத்துறை மூலம் நடத்தியது. அதேபோன்று, நடப்பு ஆண்டு கோடை காலத்தில் வேளாண்துறை மூலம் எலி ஒழிப்பு முகாம்களை நடத்தினால்தான் அடுத்த குறுவை சாகுபடிக்காவது எலிகள் தாக்குதலில் இருந்து பயிரை காப்பாற்ற முடியும் என்றனர்.

Updated On: 28 Nov 2021 5:04 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது