ரமலான் பண்டிகை: சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்

ரமலான் பண்டிகை: சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்
X

சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் ரமலான் பெருநாள் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாவட்ட பொருளாளர் சாகுல் அமீது தலைமையில் நடைபெற்ற இத்தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து உலகில் அன்பும் அறமும் மனிதநேயமும் தழைத்தோங்கவும், ஒற்றுமையுடன் வாழவும் சிறப்புத் தொழுகை நடத்தினர். பின்னர் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

இதுபோல் மயிலாடுதுறையில் நீடூர், வடகரை, கிளியனூர் உள்ளிட்ட மாவட்ட முழுவதும் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்