ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு மண் சோறு சாப்பிட்ட ரசிகர்கள்

ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு மண் சோறு சாப்பிட்ட ரசிகர்கள்
X

ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு மயிலாடுதுறையில் மண்சோறு சாப்பிட்ட ரசிகர்கள்

மயிலாடுதுறையில் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு மண் சோறு சாப்பிட்டு பிரார்த்தனை நடத்திய ரஜினி ரசிகர்கள்

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாள் அவரது ரசிகர்களால் பல்வேறு இடங்களில் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மயிலாடுதுறையில் ரஜினி ரசிகர்கள் காலை முதல் ஏழை மக்களுக்கு பல்வேறு நல உதவிகளை வழங்கி வருகின்றனர். காலை 7 மணிக்கு ஆதரவற்ற முதியோர்களுக்கு காலை உணவுகளை வழங்கினார். பின்னர் அரசு மருத்துவமனையில் இன்றைய தினம் பிறந்த குழந்தைகளுக்கு மெத்தைகளை வழங்கினர்.

தொடர்ந்து, மயிலாடுதுறை வண்டிக்காரத் தெருவில் உள்ள பிரசன்ன மாரியம்மன் கோவிலில் ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட செயலாளர் டி.எல்.ராஜேஸ்வரன் தலைமையில் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்திய ரஜினி ரசிகர்கள், பின்னர் கோவில் வளாகத்தில் அமர்ந்து மண் சோறு சாப்பிட்டு, ரஜினிகாந்த் நீண்ட ஆயுளுடன் வாழ பிரார்த்தித்தனர்.

Tags

Next Story
ai in future agriculture