மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் தமிழக ஆளுநருக்கு ராஜகுமார் எம்.எல்.ஏ. மனு

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் தமிழக ஆளுநருக்கு ராஜகுமார் எம்.எல்.ஏ. மனு
X

ராஜகுமார் எம்எல்ஏ மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் வாயிலாக தமிழக கவர்னருக்கு அனு அனுப்பினார்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் வாயிலாக தமிழக ஆளுநருக்கு ராஜகுமார் எம்.எல்.ஏ. மனு அனுப்பினார்.

மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.எல்.ஏ. எஸ்.ராஜகுமார் தலைமையில் மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியினர் மாவட்ட ஆட்சியர் லலிதா வாயிலாக தமிழக ஆளுநருக்கு கடிதம் ஒன்றை வழங்கினர்.

அந்த கடிதத்தில் ஜனவரி 5-ஆம் தேதி பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பஞ்சாப் பயணத்தின் போது நடந்த சம்பவங்களை அரசியலாக்கி பா.ஜ.க.வினர் பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஹுசைனிவாலாவில் நடந்த கூட்டத்தில் பிரதமர் பேசாமல் திரும்பிச் சென்றதற்கு காங்கிரஸ் அரசின் பாதுகாப்பு குறைபாடு என காரணம் காட்டுவது அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும்.

பாதுகாப்பு விவகாரங்களில் அனுபவம் உள்ள முன்னாள் காவல்துறை அதிகாரி என்ற முறையில், பிரதமரின் பாதுகாப்புக்கு சிறப்புப் பாதுகாப்புக் குழுதான் பொறுப்பு என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே இந்த விஷயத்தின் உண்மைத் தன்மையைக் கண்டறிந்து, பொது மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என அம்மனுவில் குறிப்பிட்டுள்ளார். அப்போது, மாவட்ட, நகர, வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story
ai healthcare products