மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர் மெய்யநாதன் நிவாரண உதவி

மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  அமைச்சர் மெய்யநாதன் நிவாரண உதவி
X

மயிலாடுதுறை மாவட்டத்தில்  வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர் மெய்யநாதன் நிவாரண உதவி வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம் ஆறுபாதி ஊராட்சியில் சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான நிவேதா எம். முருகன் அரசு அதிகாரிகள் மழையால் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் விளைநிலங்களை பார்வையிட்டனர்.

மேலும் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய அமைச்சர் மெய்யநாதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களைத் தவிர வேறு முகாம்கள் இதுவரை அமைக்கப்படவில்லை என்றும், சூழ்நிலைக்கேற்ப முகாம்கள் அமைத்து பொது மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும் என்றார். மேலும் தண்ணீர் சூழ்ந்த இடங்களில் தண்ணீரை வெளியேற்றுவதற்கு அரசு சார்பில் போர்க்கால நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!