கனமழையால் வழுவூர் வி.ஏ.ஓ. அலுவலகத்தின் மேற்கூரை சேதம்

கனமழையால் வழுவூர் வி.ஏ.ஓ. அலுவலகத்தின் மேற்கூரை சேதம்
X
வி.ஏ.ஓ. அலுவலகத்தின் மேற்கூரை சேதமடைந்துள்ளது.
கனமழை காரணமாக, மயிலாடுதுறை அருகே வழுவூரில், கிராம நிர்வாக அலுவலகத்தின் மேற்கூரை சேதமடைந்தது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது; பழைய கட்டிடங்கள் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அவகையில், குத்தாலம் தாலுக்கா வழுவூர் கிராம நிர்வாக அலுவலகத்தின் மேற்கூரை சேதம் அடைந்துள்ளது.

கட்டிடத்தின் மேற்பகுதி காரைகள் பெயர்ந்து விழுகின்றன. தற்பொழுது வடகிழக்கு பருவமழை தொடர்ந்து 3 நாட்கள் அலுவலர்கள் தங்கள் அலுவலகங்களிலேயே தங்கி இருக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், கழிவறை, குடிநீர் உள்ளிட்ட எந்த வசதிகளும் இல்லாமல், சேதமடைந்த கட்டிடத்தில் உயிர் பயத்துடன் அரசு ஊழியர்கள் வேலை பார்த்து வருவதாக அலுவலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். உடனடியாக பாதிக்கப்பட்ட கட்டிடங்களை சரிசெய்து அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil