மயிலாடுதுறை அருகே ரயிலில் அடிபட்டு ஒருவர் உயிரிழப்பு

மயிலாடுதுறை அருகே ரயிலில் அடிபட்டு ஒருவர் உயிரிழப்பு
X

சடலம் கண்டெடுக்கப்பட்ட தண்டவாளம் 

மயிலாடுதுறை அருகே, ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத நபர் உயிரிழந்தார்.

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்துள்ளது மங்கைநல்லூர். இங்கு மயிலாடுதுறை - திருவாரூர் செல்லும் ரயில் தண்டவாளத்தில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இரவில் ரயிலில் அடிப்பட்டு அவரது உடல் தண்டவாளத்தில் இருந்துள்ளது.

அவரது உடல் 10 மீட்டர் தூரத்திற்கு இழுத்து செல்லபட்டு தண்டவாளத்தில் கிடந்ததை இன்று அதிகாலையில், அப்பகுதியில் விவசாய வேலை செய்ய சென்ற விவசாயிகள் பார்த்து, மயிலாடுதுறை ரயில்வே காவல்துறைக்கு கூறி உள்ளனர். தகவல் தெரிவிக்கபட்டு 5 மணிநேரம் கடந்தும் காவல்துறையினர், உடலை மீட்காதது பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
ai marketing future