மயிலாடுதுறை அருகே புற்றடி மாரியம்மன் திருக்கோயில் தீமிதி திருவிழா
மயிலாடுதுறை அருகே புற்றடி மாரியம்மன் திருக்கோயில் 86 ஆம் ஆண்டு தீமிதி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள்
மயிலாடுதுறை அருகே புற்றடி மாரியம்மன் திருக்கோயில் 86 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடன் செலுத்தினர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா அகர ஆதனூர் கிராமத்தில் அருள்மிகு புற்றடி மாரியம்மன் திருக்கோயில் உள்ளது. கோவிலின் பூரண பரம்பரை அறங்காவலர் தம்பி.பாலவேலாயுதம் குடும்பத்தினர் முன்னிலையில் 86 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கடந்த 6 ந்தேதி பூச்சொரிதலுடன் காப்பு கட்டி விழா துவங்கியது.
தீமிதி திருவிழாவை முன்னிட்டு தினந்தோறும் அம்மனுக்கு கிராமவாசிகளால் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தன. 15ஆம்நாள் திருவிழாவான தீமிதி திருவிழாவை முன்னிட்டு பெரிய குளக்கரையிலிருந்து மேள வாத்தியங்கள் முழங்க சக்தி கரகம் புறப்பட்டு ஆலயம் வந்தடைந்தது. தொடர்ந்து ஆலயம் முன்பு அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் சக்திகரகம் இறங்கியது. தொடர்ந்து மஞ்சள் உடை உடுத்தி காப்பு கட்டி விரதம் இருந்த பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
அளவு காவடி எடுத்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் ஆனந்த நடனமாடி கோவிலை சுற்றி வந்தனர். பெண்கள் மாவிளக்கு படையலிட்டு வழிபாடு செய்தனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர். தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது வீதிஉலா நிகழ்ச்சி நடைபெற்றது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu