சீர்காழிக்கு கடத்தி வரப்பட்ட புதுச்சேரி மாநில பாட்டில் சாராயம் பறிமுதல்

சீர்காழிக்கு கடத்தி வரப்பட்ட புதுச்சேரி மாநில பாட்டில் சாராயம் பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட புதுச்சேரி சாராய பாட்டில்கள்.

மயிலாடுதுறை மவாட்டம் சீர்காழிக்கு கடத்தி வரப்பட்ட புதுச்சேரி மாநில பாட்டில் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையம் பகுதியில் அதிகாலை சீர்காழி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அவ்வழியே அதிவேகமாக வந்த சொகுசு கார் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர்.அதில் 140 புதுச்சேரி மாநில மது பாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து மது பாட்டில்கள் மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார் சீர்காழியை சேர்ந்த ராஜா,சதீஷ்குமார்,வினோத் ஆகிய மூவரையும் கைது செய்ததுடன் தப்பி ஓடிய திருக்கோலக்கா தெருவை சேர்ந்த முகேஷ் என்பவரை தேடி வருகின்றனர்.

இதுபோல சீர்காழி ரயில்வே ரோட்டில் வேகமாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டதில் அதில் புதுச்சேரி மாநில சாராயம் 148 பாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது. ஆட்டோ மற்றும் சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார் சீர்காழி சிங்காரத்தோப்பு பகுதியை சேர்ந்த சங்கர்,ராமலிங்கம் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!