மயிலாடுதுறை அருகே கள்ளச்சாராய விற்பனையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

மயிலாடுதுறை அருகே கள்ளச்சாராய விற்பனையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
X

கடுவங்குடி கிராமத்தில் கள்ளச்சாராய விற்பனையை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

மயிலாடுதுறை அருகே கடுவங்குடி கிராமத்தில் கள்ளச்சாராய விற்பனையை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

மயிலாடுதுறை அருகே கடுவங்குடி கிராமத்தில் கள்ளச்சாராய விற்பனை நடைபெறுவதை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போலீசார் பேச்சுவார்த்தை.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் தொடர்ந்து சாராய விற்பனை நடைபெற்று வருகிறது. மயிலாடுதுறை அருகே கடுவங்குடி கிராமத்தில் கள்ளச்சாராயம் விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறி அப்பகுதியை சேர்ந்த பெண்கள் கடுவங்குடி மெயின் ரோட்டில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடுவங்குடி பகுதியில் மயிலம்மாள், ராணி ஆகிய இரண்டு பெண்கள் சாராயம் விற்பனை செய்து வருவதாகவும், இதனால் தங்கள் குடும்பம் பாதிக்கப்படுவதாகவும், கள்ளச்சாராய விற்பனையால் தங்கள் பகுதியில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டி நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவம் அறிந்து வந்த மயிலாடுதுறை போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக நடவடிக்கை எடுப்போம் என்று போலீசார் வாக்குறுதி அளித்ததன் பேரில் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் மயிலாடுதுறை-மணல்மேடு சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மயிலாடுதுறை காவல் நிலையத்தில் சாராய வியாபாரிகள் ராணி மயிலம்மாள் மீது ஐந்துக்கு மேற்பட்ட வழக்குகள் இந்த வருடத்தில் மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!