செம்பனார்கோயில் ஒன்றியத்தில் பொது மக்கள் குறை தீர்க்கும் முகாம்

செம்பனார்கோயில் ஒன்றியத்தில் பொது மக்கள் குறை தீர்க்கும் முகாம்
X

பொதுமக்களிடம் இருந்து நிவதோ எம். முருகன் எம்.எல்.ஏ. மனுக்களை வாங்கினார்.

செம்பனார்கோயில் ஒன்றியத்தில் பொது மக்கள் குறை தீர்க்கும் முகாம் நாள் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட செம்பனார்கோவில், திருச்சம்பள்ளி, முக்கம்பூர், மாத்தூர், மடப்புரம் காலகஸ்தி நாதபுரம் உள்ளிட்ட ஊராட்சிகளில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் கலந்துகொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து பின்னர் அவர்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார். மேலும் குடும்ப அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு குடும்ப அட்டை வழங்கி சிறப்புரையாற்றினார்.

முகாமில் நாகை வடக்கு மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், நாகை வடக்கு மாவட்ட பொருளாளர் ஜி.என்.ரவி, ஒன்றிய செயலாளர்கள் அப்துல்மாலிக், அன்பழகன், தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி அமைப்பாளர் பி.எம். ஸ்ரீதர், அரசு அதிகாரிகள் மற்றும் தி.மு.க. பொறுப்பாளர்கள் பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!