மயிலாடுதுறையில் ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பினர்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறையில் மத்திய, மாநில மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் சா.ஜெகதீசன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாநில முன்னாள் துணைத் தலைவர் கணேசன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் கிளை செயலாளர் ரவி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில், 77 மாத கால அகவிலைப்படியை வழங்க வேண்டும், பென்சன் மறுநிர்ணயம் வழங்கி வேண்டும், மருத்துவக் காப்பீடுத் திட்டத்தை வழங்க வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu