காப்பீட்டு நிர்வாகத்தை கண்டித்து மயிலாடுதுறையில் கண்டன ஆர்ப்பாட்டம்

காப்பீட்டு நிர்வாகத்தை கண்டித்து மயிலாடுதுறையில் கண்டன ஆர்ப்பாட்டம்
X

காப்பீட்டு நிர்வாகத்தை கண்டித்து,  தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் மயிலாடுதுறையில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். 

காப்பீட்டு நிர்வாகத்தை கண்டித்து தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் மயிலாடுதுறையில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மயிலாடுதுறையில் முத்துவக்கீல் சாலையில், தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் ராமானுஜம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுதுறை ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

கடந்த 8ஆண்டுகளாக பணமில்லா மருத்துவம் என்ற பெயரில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களின் மருத்துவ செலவிற்காக ஓய்வு தொகையிலிருந்து பிடித்தம் செய்யப்படும் தொகையைவிட குறைவான தொகையை மட்டும் காப்பீட்டு நிறுவனம் ஆண்டுதோறும் மருத்து தொகையை வழங்கி வருகிறது. இதனால் நாங்கள் கையிலிருந்து மீதமுள்ள தொகையை செலுத்தி மருத்துவம் பார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

எனவே காப்பீட்டு நிறுவனம் மருத்துவத்திற்கு பிடித்தம் செய்யப்படும் தொகையை முழுமையாக மருத்துவத்திற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Tags

Next Story