பொறையாரில் முகக் கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய பேராசிரியர்

பொறையாரில் முகக் கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய பேராசிரியர்
X

பொறையாறில் பொதுமக்களுக்கு இலவசமாக முக கவசம் வழங்கினார் கல்லூரி பேராசிரியர்.

மயிலாடுதுறை மாவட்டம் பொறையாரில் முகக் கவசம் வழங்கி கல்லூரி பேராசிரியர் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இதையொட்டி பொதுமக்களுக்கு அரசு பல்வேறு விதமான விழிப்புணர்வுகளை வழங்கி வருகிறது. மயிலாடுதுறையில் உள்ள ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் இயற்பியல் துறை தலைவராக பணியாற்றிவரும் பேராசிரியர் துரை.பென்னி அன்புராஜ் தன்னால் இயன்றளவு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

தனது சொந்த ஊரான தரங்கம்பாடி தாலுகா பொறையாரில் உள்ள அரண்மனை தெரு, மார்க்கெட் வீதி ஆகிய இடங்களில் முகக் கவசம் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு அவர் முகக்கவசத்தை வழங்கியும், அணிவித்தும் கொரோனா வழிகாட்டு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற அறிவுறுத்தி விழிப்புணர்வு வழங்கினார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!