மயிலாடுதுறையில் பிரியங்கா காந்தி விடுதலை கோரி காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் பிரியங்கா காந்தி விடுதலை கோரி காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
X

பிரியங்கா காந்தியை விடுதலை செய்யக்கோரி மயிலாடுதுறையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

உ.பி.யில் கைது செய்யப்பட்ட பிரியங்கா காந்தியை விடுதலை செய்யக்கோரி மயிலாடுதுறையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

உத்தரபிரதேச மாநிலத்தில் நான்கு விவசாயிகள் உட்பட 8 பேர் பலியான சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறச் சென்ற காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டார்.

இதனை கண்டித்தும், விவசாயிகளுக்கு எதிராக செயல்படும் மோடி அரசை கண்டித்தும் , வேளாண் சட்டத்தை திரும்ப பெறக் கோரியும் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மகளிர் உட்பட100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் வீட்டுக்காவலில் வைத்திருக்கும் பிரியங்கா காந்தியை உடனடியாக விடுதலை செய் என்பது உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்