சீர்காழியில் அச்சக உரிமையாளர்கள் நல சங்க கூட்டத்தில் முக்கிய தீர்மானம்

சீர்காழியில் அச்சக உரிமையாளர்கள் நல சங்க கூட்டத்தில் முக்கிய தீர்மானம்
X

சீர்காழியில் அச்சக உரிமையாளர்கள் சங்க கூட்டம் நடந்தது.

சீர்காழியில் நடந்த அச்சக உரிமையாளர்கள் நல சங்க கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சீர்காழியில் அச்சக உரிமையாளர்கள் நல சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அதன் தலைவர் மதியழகன் தலைமை வகித்தார். பொருளாளர் பார்த்திபன்,துணை செயலர்கள் தில்லை.நடராஜன்,ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலையொட்டி துண்டு பிரசுரங்கள் அச்சடிக்க வரும் வேட்பாளர்களின் முழு விவரங்களை பெற்று துண்டுபிரசுரம் அச்சடித்துதருவது, தேர்தலில் போட்டியிடும் எதிர் வேட்பாளர்கள் குறித்து தனிநபர் விமர்சனம்,அரசியல் காழ்புணர்ச்சி,பதற்றம் ஏற்படுத்தும் வகையில் வாசகங்கள் போன்ற ஏதும் அமைதியை சீர்குலைக்கும் வகையிலான துண்டுபிரசுரங்கள் அச்சடிப்பதில்லை,துண்டுபிரசுரங்கள் அச்சடிக்க வரும் வேட்பாளர்கள் உடன் வருபவர்கள் கட்டாயம் முககவசம் அணிந்து வந்தால் மட்டுமே அச்சடித்து தர ஆர்டர் பெறவேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இந்த கூட்டத்தில் அச்சக உரிமையாளர்கள் சிவகுருநாதன்,விஜி,ஞானவேல்,உத்திரா,கோவிந்தராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
ai automation in agriculture