/* */

மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர் மின்வெட்டு: விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மின்வெட்டை கண்டித்து மயிலாடுதுறையில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் முற்றுஆர்ப்பாட்டம்

HIGHLIGHTS

மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர் மின்வெட்டு: விவசாயிகள் சங்கத்தினர்  ஆர்ப்பாட்டம்
X

மயிலாடுதுறை மின்வாரிய அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தேசியதென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர் மின்வெட்டை கண்டித்து மயிலாடுதுறை மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு பலமணிநேரம் தொடர்கிறது. இந்த மின்வெட்டால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகுந்த அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். கோடை காலம் என்பதால் மின் நிறுத்தத்தின் காரணமாக ஏசி அல்லது மின் விசிறி இயங்காத காரணத்தால் பொதுமக்கள் புழுக்கம் தாங்காமலும், பள்ளி மாணவ மாணவிகள் இரவில் படிக்க முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். மேலும் தற்போது மயிலாடுதுறை மாவட்டத்தில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த பருத்தி சாகுபடிக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் பயிர்கள் காய்ந்துவருகின்றன,.

மின்சாரம் வழங்காததைக்கண்டித்து மயிலாடுதுறை மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Updated On: 22 April 2022 11:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது