மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு எதிரான போராட்டம் ஒத்திவைப்பு

மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு எதிரான போராட்டம் ஒத்திவைப்பு
X
மயிலாடுதுறையில் மாதர்சங்க கூட்டம் நடந்தது.
மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு எதிரான போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்டுவரும் பெண்களுக்கு எதிராக செயல்படுவதாக குற்றச்சாட்டு இருந்துவந்தது. தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எதிராகவும், குற்றவாளிகளுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருவதால் பாதிக்கப்பட்ட பெண்கள் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தை அனுகினர், மாதர் சங்கத்தினர் கூட்டத்தில் எடுத்த தீர்மானத்தின்படி மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பாக மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தைக் கண்டித்து போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.

இதுகுறித்து மயிலாடுதுறை காவல்துறை துணைக்காவல் கண்காணிப்பாளர் வசந்தராஜ் தலைமையில் மயிலாடுதுறை டி.எஸ்.பி. அலுவலக வளாகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சங்கீதா, அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்க மத்தியக்குழு உறுப்பினர் அமிர்தம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சீனிவாசன், மாதர் சங்க மாநில துணைத்தலைவர் கலைச்செல்வி, மாவட்ட செயலாளர் வெண்ணிலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர், குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுதல், குற்றவாளிகள்மீது வழக்கு பதிவு செய்தும் முன்ஜாமீன் கிடைக்கும்வரை கைது செய்யாமல் குற்றவாளிகள் தப்பிப்பதற்கு துணை போவதைக் கைவிட வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பினர். குறிப்பிட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டுவருகின்றனர் என்றும், இனிமேல் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடக்க மாட்டார்கள் என்றும் உறுதி அளித்தனர். அதை ஏற்றுகொண்ட மாதர்சங்கத்தினர் நடத்துவதாக அறிவித்த போராட்டத்தைக் கைவிட்டனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி