தரமற்ற ரேஷன் அரிசி: சாலையில் அரிசியைக் கொட்டி கிராம மக்கள் போராட்டம்

தரமற்ற ரேஷன் அரிசி:  சாலையில் அரிசியைக் கொட்டி கிராம மக்கள்  போராட்டம்
X

மயிலாடுதுறை அருகே உள்ள ஆனைமேலகரம் ரேஷன் கடையில் தரமற்ற அரசி விநியோகிப்பதைக்கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

கடந்த ஒரு வருடமாக கருப்பு நிறத்திலும், மஞ்சள் நிறத்திலும் துர்நாற்றம் வீசும் அரிசியை கொடுப்பதாக மக்கள் புகார் தெரிவித்தனர்

மயிலாடுதுறை அருகே ரேஷன் கடையில் வழங்கப்படும் அரிசி தரமற்றதாக இருப்பதாக குற்றம்சாட்டி, அரிசியை சாலையில் கொட்டி கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் வழங்கப்படும் இலவச அரிசி தரமில்லாத அரசியாக உள்ளதால் பொதுமக்கள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மயிலாடுதுறை அருகே உள்ள ஆனைமேலகரம் ஊராட்சியில் சுமார் 700க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த ஊராட்சியில் உள்ள ரேஷன் கடையில் தரமில்லாத அரிசி வழங்கப்படுவதைக் கண்டித்து, கடையின் முன்பு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அரிசியை சாலையில் கொட்டி பொதுமக்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். போராட்டம் நடத்தியவர்கள் கூறுகையில், கடந்த ஒரு வருடமாக கருப்பு நிறத்திலும், மஞ்சள் நிறத்திலும் துர்நாற்றம் வீசும் அரிசியை கொடுத்து வருகின்றனர்.

நாங்களும் பலமுறை அதிகாரிகளிடம் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடுதுறை வட்ட வழங்கல் அலுவலர் சாந்தி மற்றும் குத்தாலம் போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முடிவில், தரமான அரிசியை வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததின் பேரில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself