பூம்புகார் சுற்றுலாதலம் மேம்படுத்தபடும்: சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன்

பூம்புகார் சுற்றுலாதலம் மேம்படுத்தபடும்: சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன்
X

சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன்

பூம்புகார் சுற்றுலா மையத்தை புதுப்பித்து மெருகேற்றும் வகையில் பிரமாண்ட திட்டம் செயல்படுத்தபட உள்ளது

பூம்புகார் சுற்றுலாதலம் மேம்படுத்தபடும், தடைபட்டுள்ள பாரம்பரிய இந்திர திருவிழா நடைபெற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலாதுறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே பூம்புகார் சுற்றுலாதலத்தில் தமிழக சுற்றுலாதுறை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வுமேற்கொண்டார் கலைக்கூடம், பாவைமன்றம், நிலாமுற்றம், பளிங்கு மண்டபம், சங்கு மற்றும் சிப்பி விடுதி, காவிரி சங்கமம் உள்ளிட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அமைச்சர் கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளாக பூம்புகாரில் எந்த சீரமைப்பு பணிகளும் செய்யாமல் பழுதடைந்துள்ளது. தற்போது பூம்புகார் சுற்றுலா மையத்தை புதுப்பித்து மெருகேற்றும் வகையில் பிரமாண்ட திட்டம் செயல்படுத்தபட உள்ளது. அதே போல் தடைபட்டுள்ள பாரம்பரிய திருவிழாவான இந்திரதிருவிழா இந்த ஆண்டும் கொரோனா தொற்று காரணமாக நடத்த முடியாது. வரும் ஆண்டுகளில் நடைபெற முதல்வரிடம் ஆலோசித்து அந்த லிழாவை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அமைச்சர் மதிவேந்தன்.

இதில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் சசிகுமார் பிரபாகரன் இமயநாதன் நகர செயலாளர் சுப்புராயன் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஸ்ரீதர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மகா.அலெக்சாண்டர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்


Tags

Next Story
ai solutions for small business