பூம்புகார் தொகுதி திமுக வேட்பாளர் பிரச்சாரம்

பூம்புகார் தொகுதி திமுக வேட்பாளர் பிரச்சாரம்
X
பூம்புகார் தொகுதி திமுக வேட்பாளர் நிவேதா எம். முருகன் திறந்த வாகனத்தில் சூறாவளி பிரச்சாரம் செய்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளரும் நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் இன்று பூம்புகார் தொகுதி பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரிப்பதற்காக குத்தாலம் கிழக்கு ஒன்றியம் அசிக்காடு, வழுவூர், பண்டாரவாடை, மங்கைநல்லூர், கழனிவாசல். உள்ளிட்ட ஊராட்சிகளில் சூறாவளி பிரச்சாரத்தை திறந்த வாகனத்தில் தொடங்கினார். பொதுமக்கள் பட்டாசு வெடித்தும், வழி நெடுகிலும் பொன்னாடை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர்.

மேலும், தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டுப் பிரசுரத்தை திமுக கூட்டணி கட்சியினர் வழங்கினர். கடந்த திமுக ஆட்சியின் சாதனைகள், திட்டங்கள் குறித்தும் பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில் கூட்டணி கட்சிகளான விடுதலைசிறுத்தை கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ், இந்திய தேசிய லீக் உள்ளிட்ட தோழமை கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு

இருசக்கர வாகனத்தில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டவாறு சென்றனர். இதில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!