மயிலாடுதுறையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி : துவங்கி வைத்த கலெக்டர்

மயிலாடுதுறையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி : துவங்கி வைத்த கலெக்டர்
X

மயிலாடுதுறை மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை கலெக்டர் லலிதா தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை கலெக்டர் லலிதா துவக்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை வள்ளாலகரம் கூட்டுறவு சிறப்பங்காடியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா துவக்கி வைத்தார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி முழு கரும்பு, பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை உள்ளிட்ட 21 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பினை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கினார்.

வருகின்ற 10ஆம் தேதிக்குள் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள424 ரேஷன் அங்காடிகள் மூலம் 2 லட்சத்து 76 ஆயிரத்து 401 குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு முழுமையாக பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்றும், பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு பெற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார்.

மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் 27 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ள வில்லை என்றும் மூன்றாவது அலையான ஒமிக்ரான் தொற்றிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டு நோய்தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், சட்டமன்ற உறுப்பினர்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம், ராஜகுமார் மற்றும் நுகர்வோர் கூட்டுறவு துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story