பொங்கல் பரிசு விவகாரம்: நியாய விலை கடை விற்பனையாளர் தற்காலிக பணி நீக்கம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த சட்டநாதபுரம் அரசு நியாயவிலைக் கடை
பொங்கல் பரிசு மற்றும் தரமற்ற அரிசி வழங்கிய நியாயவிலை கடையை கடந்த 28ம் தேதி முற்றுகையிட்ட பொதுமக்கள்,நியாய விலை கடை விற்பனையாளர் தற்காலிக பணி நீக்கம் செய்து செம்மங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த 28ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த சட்டநாதபுரம் அரசு நியாயவிலைக் கடையில் அப்பகுதி மக்கள் 200க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர், 2022ஆம் ஆண்டு தமிழக அரசியல் பொங்கல் பரிசு தொகுப்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு முறையாக வழங்காததால் மற்றும் புழு பூச்சி உள்ள தரமற்ற அரிசியை வழங்கியதை கண்டித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்,
அரசு வழங்கிய 21 பொருட்களும் வழங்காமல் வழங்கப்படாத பொருட்களுக்கு துண்டுச் சீட்டில் எழுதிக் கொடுத்து மற்றொரு நாளில் பெற்றுக்கொள்ள அறிவித்துள்ளதை கண்டித்தும் பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர், இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் வட்ட வழங்கல் துறை அலுவலர்கள் பொது மக்களிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததன் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சம்பவம் செய்திய்யாக வெளியானதை அடுத்து செம்மங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் 2022ஆம் ஆண்டு தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை முறையாக வழங்கத் தவறியது, இருப்பு குறைவு ஏற்படுத்தியது, அன்றாட விற்பனை தொகையை முறையாக சங்கத்தில் செலுத்த தவறியது உள்ளிட்ட காரணங்களுக்காக சட்டநாதபுரம் நியாய விலை கடை விற்பனையாளர் சக்கரவர்த்தியை தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்த செம்மங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu