மயிலாடுதுறை மாவட்ட மாணவிகளுக்கு போலீஸ் எஸ். பி. சுகுணா சிங் அறிவுரை
மயிலாடுதுறையில் நடந்த பள்ளி மாணவிகளுக்கான நிகழ்ச்சியில் போலீஸ் எஸ்.பி சுகுணா சிங் பேசினார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது பாலியல் தொந்தரவு குற்றங்கள் அதிகரித்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டு தற்போது வரை 60க்கும் மேற்பட்ட பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்கள் குறித்தும், அதில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து மயிலாடுதுறை தனியார் பள்ளியில் மாணவிகளுக்கானவிழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
மாவட்ட காவல்துறை சார்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் மாணவிகள் ஆண்களுடன் எவ்வாறு பழக வேண்டும், தொட்டு பேசுதல் கூடாது, சமூக வலைதளங்களை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும், அறிமுக இல்லாத நபர்களுடன் சமூக வலைதளங்களில் நட்பை தொடரக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கருத்துரைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங், டி.எஸ்.பி. வசந்தராஜ், மகளிர் காவல் ஆய்வாளர் சங்கீதா ஆகியோர் மாணவிகளுக்கு அறிவுரையாக வழங்கினர்.
மேலும் 1098181 என்ற நம்பரை தொடர்பு கொண்டு காவல்துறையின் உதவியை பெற அறிவுறுத்தினர். இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் நலத்துறை அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu