மண்ணில் புதைத்து வைத்த சாராயம். போலீசார் பறிமுதல்

மண்ணில் புதைத்து வைத்த சாராயம். போலீசார் பறிமுதல்
X
மயிலாடுதுறை அருகே மண்ணில் புதைத்து வைத்திருந்த 750 லிட்டர் சாராயம், 800 பாக்கெட் சாராயம் பறிமுதல். ஒருவர் கைது

மயிலாடுதுறை மாவட்டம் திருவிளையாட்டம் பகுதியில் அதிக அளவில் சாராய விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவட்ட எஸ்.பி ஸ்ரீநாதா உத்தரவின்பேரில் தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் இளையராஜா தலைமையில் தனிப்படை போலீசார் மற்றும் மதுவிலக்கு போலீசார் திருவிளையாட்டத்தில் ரோந்தில் ஈடுபட்டனர்.

அப்போது திருவிளையாட்டம் பாலம் அருகில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த பாரதி என்பவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் அப்பகுதியில் உள்ள காலவாய் அருகில் வாய்க்காலில் புதைத்து வந்து சாராயத்தை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, புதைத்து வைத்திருந்த சாராயத்தை தோண்டிப் பார்த்ததில் அதில் 15 கேன்களில் 750 லிட்டர் சாராயம் மற்றும் சாக்கு மூட்டைகளில் 800 சாராய பாக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, சாராயத்தை பறிமுதல் செய்து மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு நிலையத்தில் ஒப்படைத்த போலீசார், பாரதியை கைது செய்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!